நயன்தாராவுக்கு 100க்கு 100 மார்க்: விக்னேஷ்சிவன் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படம் நிச்சயம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு விமர்சகர் 5க்கு 5 ஸ்டார் கொடுத்துள்ளார். அதாவது 100க்கு 100 மார்க் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறிய நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், 'நான் இதுவரை 5க்கு 5 எந்த படமும் பெற்று பார்த்ததே இல்லை' என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

'அறம்' படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று கூறிய விக்னேஷ் சிவன், 'இந்த படத்தை பார்க்கும்போது ஒருவித மயக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நயன்தாரா வழக்கமான பாதையில் இருந்து வெளியேறி, சக்தி வாய்ந்த பாதைக்கு மாறியுள்ளார். தைரியமான முயற்சி. மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை நயன்தாராவின் எண்ட்ரிக்கு பின்னர் வேகம் பிடித்து கடைசி வரை விறுவிறுப்புடன் செல்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் நம் டென்ஷன் அதிகரிக்கும் வகையில் உள்ளது. மேலும் ஜிப்ரானின் இசை, கோபியின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுக்கள்' என்று கூறியுள்ளார்.

More News

விக்ரம் மகன் துருவ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

வீடுதேடி வரும் வங்கி சேவை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் காசோலைகள் மற்றும் டிடி ஆகியவற்றுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் இவ்வித சேவைகளுக்காக வங்கி அதிகாரிகள் இனி வீடுதேடி வருவார்கள்

விஜய்சேதுபதிக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் பாராட்டு

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த ரூ.50 லட்சத்தை அப்படியே கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக விளங்கி வரும் அரியலூர் மாவட்டத்திற்கு நன்கொடை அளித்தார்

கொல்கத்தா பயணம் அரசியல் பயணமா? மம்தாவை சந்தித்த பின் கமல் பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றும், அதனுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டமும் கமலிடம் இருந்ததாகவும்

காதலரை சந்தித்தது எப்போது? திருமணம் குறித்த நமீதாவின் அறிவிப்பு

நடிகை நமீதாவின் திருமணம் குறித்து பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ரைசா வெளியிட்ட வீடியோ குறித்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் நடிகை நமீதா தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.