யுவன்ஷங்கருடன் இணைந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன், இளம் இசைஞானி யுவன்ஷங்கருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். ஆம், யுவன் இசையில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன் இசையில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டாது. மேலும் இசையமைப்பாளர் யுவன், சூர்யா மற்றும் தயாரிப்பாளர் பிரபு ஆகியோர்களுடன் பணிபுரிந்தது பெருமை
சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு மிக விரைவில் ஒரு நல்ல பாடல் காத்திருக்கின்றது என்பது 'என்.ஜி.கே' அப்டேட்டாக கூறுகிறேன்' என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
#SundaySurprise
— Vignesh ShivN (@VigneshShivN) October 21, 2018
Writing ✍?? a nice song in #NGK
Dream come true to write for the genius-our common favourite director @selvaraghavan sir??
the great @thisisysr ?? for @Suriya_offl sir @prabhu_sr
So the #NGKUpdate for the day is- nalla songs gettin ready for the #AnbaanaFans ?? pic.twitter.com/NH49Z3s8zh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments