யுவன்ஷங்கருடன் இணைந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன், இளம் இசைஞானி யுவன்ஷங்கருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். ஆம், யுவன் இசையில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன் இசையில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டாது. மேலும் இசையமைப்பாளர் யுவன், சூர்யா மற்றும் தயாரிப்பாளர் பிரபு ஆகியோர்களுடன் பணிபுரிந்தது பெருமை

சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு மிக விரைவில் ஒரு நல்ல பாடல் காத்திருக்கின்றது என்பது 'என்.ஜி.கே' அப்டேட்டாக கூறுகிறேன்' என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

More News

சிம்பு மீதும் 'மீடூ' குற்றச்சாட்டு? பிரபல நடிகையின் டுவிட்டால் பரபரப்பு

'ஜெயம் கொண்டான்' உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் தனது டுவிட்டரில் 'ஒரே ஒரு வார்த்தை' 'கெட்டவன்' என்று 'மீடூ' பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சின்மயி விஷயம் குறித்து ஏ.ஆர்.ரஹைனா கூறும் அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்புடன் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வரும் நிலையில்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபரிமலைக்கு சென்ற பாத்திமா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து நீக்கம்

பத்திரிகையாளர் கவிதாவுடன் முஸ்லீம் பெண்ணான பாத்திமா என்பவர் சபரிமலைக்கு சென்றார். ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய இருவரும் பின்னர் கேரள அரசின் உத்தரவால் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஆண் விபச்சார உரிமை கேட்போம்: சபரிமலை விவகாரம் குறித்து சாருஹாசன்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறித்து பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை