எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள். சூர்யா ரசிகர்களிடம் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் நேற்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பர்ஸ்ட்லுக் வெளியாகாததால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பணிகள் நடந்து வருவதாகவும், இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தால் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் சூர்யா ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மட்டுமின்றி சிங்கிள் பாடல் ஒன்றின் டீசரும் விரைவில் வெளியாகவுள்ளதாக அவர் அனிருத்துடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்தார்.

அந்த வீடியோவில் இந்த படத்தின் பாடல் ஒன்றை அனிருத் பாடுவதாக உள்ளது. அந்த பாடலின் வரிகள் இவைதான்:

ஒரு குட்டி சைஸ் புஷ்வானம் கொழுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி!
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல!

இந்த பாடலை விக்னேஷ் சிவனே எழுதியுள்ளதாகவும், இந்த பாடலின் டீசர் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அனிருத் கூறியுள்ளார்.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.