இது போதும்டா சாமி! விக்னேஷ்சிவன் பார்த்து வியந்த நட்சத்திரம்

  • IndiaGlitz, [Tuesday,May 21 2019]

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டே தனது விருப்பத்துக்குரிய நட்சத்திரங்களான 'ரஷ் ஹவர்' நடிகர் கிரிஸ் டக்கரில் இருந்து பல ஹாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

அதேபோல் நம்மூர் பிரபலங்கலான ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ் மேனன், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களையும் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவின்போது சந்தித்து புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.

இந்த நிலையில் உலக திரையுலகமே போற்றும் நடிகர் மற்றும் இயக்குனரான Quentin Tarantino அவர்களை தற்போது விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளார். அவரிடம் சில வார்த்தைகள், ஒரு கைகுலுக்கல், ஒரு புன்னகை இது போதும்டா சாமி' என்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Quentin Tarantino இயக்கிய 'Once Upon A Time In Hollywood என்ற திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது என்பதும் இந்த படத்தில் டைட்டானிக் நாயகன் லியானார்டோ டிகேப்ரிகோ, பிராட்பிட் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது