close
Choose your channels

சமந்தா- நயன்தாராவுடன் செம்ம டான்ஸ் ஆடும் விக்னேஷ் சிவன்.. இது எப்ப நடந்தது? வைரல் வீடியோ..!

Sunday, April 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடனம் ஆடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான நிலையில் சரியாக இன்றுடன் இந்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ 2 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘டூ டூ டூ’ என்ற பாடலின் படப்பிடிப்பின் போது நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தாவுடன் விக்னேஷ் சிவன் நடனமாடும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவை பதிவு செய்த விக்னேஷ் சிவன் ’இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியதை அடுத்து நான் சில மலரும் நினைவுகளை நினைவு கூறுகிறேன். இந்த படத்தை எடுக்க நயன்தாரா மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் இல்லாமல் இந்த படம் நிறைவேறிருக்காது. என்னுடைய அன்பு நண்பர் விஜய் சேதுபதி இந்த படத்தில் மிக வித்தியாசமான அசத்தலான கேரக்டரை பண்ணி இருந்தார். அதேபோல் சமந்தா, கதீஜா என்ற கேரக்டரில் அசத்தியிருந்தார், அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னுடைய கிங் அனிருத் இல்லாமல் இந்த படம் இல்லை, அவர் தான் அவர் தனது வாழ்நாள் சிறந்த பாடல்களை இந்த படத்தில் கொடுத்திருந்தார். மொத்தத்தில் இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது நன்றியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகை சமந்தாவும் லைக் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos