நயனுடன் செல்பி: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தந்த விக்னேஷ்சிவன்

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

இயக்குனர் விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்றைய விநாயகர் சதுர்த்தி தினம் இந்த காதலர்களுக்கு ஸ்பெஷல் நாளாக இருந்துள்ளது.

விக்னேஷ் சிவன் நயனுடன் எடுத்த செல்பி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில், 'விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்றும் இந்த நல்ல நாளில் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்வதாகவும், சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் இன்றைய நாள் நல்ல நாளாக இருந்தது என்றும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியானதை அடுத்து அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும் என சமூக வலைத்தள பயனாளிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.