நூற்றுக்கணக்கான அடிகள், மில்லியன்கணக்கான மிதிகள்: 2023 குறித்து விக்னேஷ் சிவன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
2023 ஆம் ஆண்டு தனக்கு நூற்றுக்கணக்கான அடிகள் மற்றும் மில்லியன்கணக்கான மிதிகள் கிடைத்ததாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் இரண்டு இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் தனது இரண்டு குழந்தைகளின் நூற்றுக்கணக்கான அடிகள் மில்லியன் கணக்கான மிதிகளை பெற்றுள்ளதாகவும், இந்த 2023 ஆம் ஆண்டு மகிழ்ச்சியுடன் கடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கை பயணத்தில் தனது மனைவி நயன்தாராவின் நிபந்தனை அற்ற அன்பு கிடைத்ததாகவும், குழந்தைகள் மீது அவர் காட்டிய அன்பு காரணமாக தனது மகன்களின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது என்றும் அந்த அன்பு நேர்மறை காரணமாக தங்கள் வீடு மிகவும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எனது லட்சிய இலக்கை நோக்கி முன்னேறவும் கடினமாக உழைக்கவும் அனைத்து ஆற்றல்களும் தனக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’கைவிட கடலளவு மனிதர்கள் இருக்கும் இதே இடத்தில் கைதர கையளவு மனிதர்கள் இருப்பது அழகு’ என்று அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும் ’நம்பிக்கையுடன் நகர்வோம், நல்ல ஒரு ஆண்டாக இது அமையும்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் தனது இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக்கள் மற்றும் கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments