கொரோனா வதந்திக்கு க்யூட்டான வீடியோ மூலம் பதிலளித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனிமைப்பட்டுள்ளதாக நேற்று ஒரு சில ஊடகங்களில் வதந்திகள் வெளியாகின. இந்த வதந்திக்கு இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஒரு க்யூட் வீடியோ மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்

இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சிறு வயதில் இருப்பது போன்ற க்யூட்டான காட்சிகள் உள்ளன. அதில் எங்களைப் பற்றிய வதந்திகள் குறித்த செய்திகளை நாங்கள் பார்த்து வருகிறோம். நாங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். கேலி செய்யும் அனைவரின் கற்பனைகள் எங்களுக்கு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது. இதனை காண கடவுள் எங்களுக்கு பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து உள்ளார் என்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சிறுவயதில் இருப்பது போன்ற காட்சிகள் உள்ள இந்த க்யூட்டான வீடியோ தற்போது வதந்திக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்தது மட்டுமின்றி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது