விக்கி-நயன் ஹனிமூன் அசத்தல் புகைப்படங்கள்: எந்த நாடு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் என்பதும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு புதுமண தம்பதிகள் சுற்றுலா சென்றனர் என்பதும் தெரிந்ததே.

அதன் பின்னர் நயன்தாராவின் சொந்த ஊருக்கு விருந்துக்கு சென்ற தம்பதிகள் தற்போது தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்று உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

’தாய்லாந்தில் தாரத்துடன் ஹனிமூன்’ என்ற கேப்ஷனுடன் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள இந்த அசத்தலான புகைப்படங்களில் விக்கி-நயனின் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.