குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி விட்ட விக்கி.. உலக தந்தையர் தினத்தில் க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

இன்று உலகம் முழுவதும் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா உள்பட பல நடிகைகளும் இன்ஸ்டாவில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது அவரும் குழந்தையாக மாறி உயிர் மற்றும் உலகம் குழந்தைகளை கொஞ்சும் காட்சிகள் உள்ளன.

ஒரு அன்பான தந்தை தனது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘என்னுடைய வாழ்க்கையில் உள்ள மொத்த மகிழ்ச்சிக்கும் காரணம் இந்த உயிர் மாற்றும் உலகம் ஆகிய இரண்டு குழந்தைகள் என்றும் அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் விக்னேஷ் சிவன் அதில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் நயன்தாராவையும் கேப்ஷன் செய்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் தற்போது ’எல்ஐசி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் பிரதீப் அந்தோணி, எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

More News

பிறந்து 20 நாள் தான்.. க்யூட் குழந்தையுடன் போட்டோஷூட் எடுத்த நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் அவர் எடுத்துள்ள க்யூட் போட்டோஷூட்

கையில் கோப்பை.. நீச்சல் குளத்தில் பிகினி.. கிளாமரில் கலக்கும் பாடகி ஜொனிதா காந்தி..!

பிரபல பாடகி ஜொனிதா காந்தி நீச்சல் குளத்தில் கையில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல்

நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்: அபிஷேக் புது மனைவி அதிர்ச்சி பேட்டி..!

பிரபல யூடியூபர்  மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் சமீபத்தில் சுவாதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருடைய புது மனைவி 'நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்

விதார்த், வாணிபோஜனை கைது செய்ய வேண்டும்: காவல்துறையில் அளிக்கப்பட்ட திடீர் புகார்..!

நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் ஒரு கதையில் நடித்த விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு புதிய வாழ்க்கை.. புதிய ஆரம்பம்.. நடிகை லைலாவின் ஜாலியான பேட்டி..!

நடிகர் விஜய் இன்னும் ஒரு வாரத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை ,புதிய ஆரம்பம் தொடங்க இருப்பதாக நடிகை லைலா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி தெரிவித்துள்ளார்.