குளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

டூவீலரில் செல்லும் இளைஞர்கள் பல்வேறு சாகசங்களை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இரண்டு வாலிபர்கள் டூவீலரில் சென்றுகொண்டிருக்கும்போது குளித்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது

வியட்நாம் நாட்டை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருவருக்கும் நடுவில் ஒரு வாளி நிறைய தண்ணீர் உள்ளது. டூவீலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதில் உள்ள தண்ணீரை எடுத்து இருவரும் மாறி மாறி குளித்தனர். இடையில் சோப்பும் போட்டுக்கொண்டனர்.

இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக இந்த வீடியோவின் அடிப்படையில் அந்த இருவரையும் கண்டுபிடித்த போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். குளிப்பதற்கு எவ்வளவோ இடம் இருக்கும்போது டூவீலரில் செல்லும் போது தான் குளிக்க வேண்டுமா? என நெட்டிசன்கள் அந்த வாலிபர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்