ஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,September 25 2020]

 

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சட்டவிரோதமாக ஒரு கும்பல் விற்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட பின்டு அங் மாகாணத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சோதனையில் ஈடுபட்டபோது அந்நாட்டு போலீசார் ஏற்கனவே பயன்படுத்திய 360 கிலோ ஆணுறைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு கிலோ 0.17 டாலருக்கு வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அவர்கள் சுத்தம் செய்து அதன் வடிவத்தை மாற்றி, புதிதுபோல பைகளில் அடைத்து விற்பனைக்கு தயார் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து அந்நாட்டு சமூக நல ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இதுபோன்ற மருத்துவப் பொருட்களில் கடுமையான எச்சரிக்கை தேவை என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அத்தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுபோன்று எத்தனை பேருக்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் விற்கப்பட்டன என்பது பெரும் கவலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அந்தக் கிடங்கில் இருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ஆணுறைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆனால் பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற பொருட்களில் இருந்து உயிரை கொல்லும் கொடிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்!!!

சீனாவில் 700 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மறக்க முடியாது பாலு சார், மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் ஆகியோர் வெளியிட்ட வீடியோ குறித்து பார்ப்போம்

கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்

எஸ்பிபியின் கடைசி பாடல் 'அண்ணாத்த' படத்திற்கா? டி.இமான் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்திற்காக பாடப்பட்டுள்ளது என இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்துள்ளார் 

தலைமுறைகளை கடந்த தலைசிறந்த பாடகர்‌: கேப்டன் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், எஸ்பிபி மறைவு குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: