நுழைவாயில் முதல் பாத்ரூம் வரை முழுக்க முழுக்க தங்கம்: வியட்நாம் தங்க ஹோட்டலின் ஆச்சரிய புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வியட்நாமில் டன் கணக்கில் தங்கத்தினால் முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் ஹோட்டல் பிசினஸ் பெரும் போட்டி ஆகியுள்ள நிலையில் போட்டிகளை சமாளிக்க புதுப்புது ஐடியாக்களை ஹோட்டல் நிர்வாகிகள் ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் ஒரு புதிய ஐந்து நட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டது. டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், ஹோவா குழுமத்திற்கு சொந்தமான இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஹோட்டலின் நுழைவாயில் முதல் ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலும் குறிப்பாக பாத்ரூம் உள்பட அனைத்து பகுதிகளிலும் தங்கமுலாம் பூசி உள்ளனர். சுமார் ஒரு டன் அளவில் இதற்காக தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஹோட்டலில் உள்ள அறையில் ஒவ்வொரு பகுதியிலும் தங்கம் இருப்பதை பார்த்து அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த ஓட்டலில் ஓர் இரவு தங்குவதற்கு சுமார் 18 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அவர்களை கவர்வதற்காக முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன இந்த ஓட்டல் தற்போது திறக்கப்பட்டுள்ளது என்பதும் எதிர்பார்த்தது போலவே இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹோவா பின் குழுமத்தின் தலைவர் நுயேன் ஹு டுவோங் இந்த ஓட்டல் குறித்து கூறுகையில், ‘உலகத்தில் இதுபோன்ற ஓட்டல் வேறெங்கும் இல்லை. ஓட்டலின் கூரையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர் அறைகளுக்குள், குளியலறைகள் தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout