உருமாறிய கொரோனா.... வியட்நாமில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு....!

  • IndiaGlitz, [Sunday,May 30 2021]

வியட்நாமில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடித்துள்ளதாகவும், அவை உருமாறி காற்றில் வேகமாக பரவி வருவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வியட்நாமில் இப்படி உருமாறியுள்ள கொரோனா வைரஸ் மிக ஆபத்தானது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் குயேன் அறிவித்துள்ளார். வைரஸ்-கள் எப்போதும் உருமாற்றம் அடைந்துகொண்டே தான் இருக்கும். அவற்றில் சில முக்கியமற்றதாக இருக்கும், ஆனால் இந்தவகை கொரோனா வைரஸ்கள் அதிகம் பரவும் தன்மை உடையது. கடந்த 2019-ஆம் ஆண்டு, சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்த கொரோனா தொற்று, வரலாறு காணாத அளவில் பல உயிர்ச்சேதங்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கொரோனா உருமாற்றம் அடைந்து பரவுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வகை மற்றும் பிரிட்டனில் பரவியுள்ள கொரோனா வகை என்று, இரண்டும் கலாந்தாற்போல புதிய வகை கோவிட் தோற்று வியட்நாமில் பரவி வருவதாக, அரசாங்க கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார், இந்த செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது. இந்த புதிய வகை தொற்று, பழைய தொற்றை காட்டிலும் வேகமாகவும், காற்றில் எளிதிலும் பரவக்கூடியது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதித்து பார்த்ததில், இந்த வகை கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது, இத்தகவலை விஎன் எக்ஸ்பிரஸ் என்ற இணைய செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஜெனிட்டிக் கோட் கூடிய விரைவில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த இருவாரங்களில் மட்டும் வியட்நாமில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 6700 பேர் அந்த நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 47 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். குறைந்த அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக வியட்நாம் இருந்துவருகிறது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 5 லட்சத்து 94 ஆயிரத்து 304 பேர் கோவிட்- ஆல் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது, நம் நாட்டில் லட்சத்து 22 ஆயிரத்து 512 பேர் கொரோனாவுக்கு இதுவரை பலியாகி உள்ளனர்.

ஏற்கனவே வியட்நாமில் 7 வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்பதால், இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.