'தல 56' படத்தில் இணையும் 'புலி' நடிகை

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்யின் 'புலி' படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது புதிதாக இந்த படத்தில் இணைந்துள்ளார். 'புலி' படத்தில் சித்திரக்குள்ளியாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் வித்யூலேகா ராமன், தல 56' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வித்யூலேகா ராமன் கூறியதாவது, "'தல 56' படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் பிளாஷ்பேக்கில் வரும் ஒரு காட்சியில் நடிக்கின்றேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் தல-தளபதி நடித்த 'வீரம்' மற்றும் 'ஜில்லா'வில் நடித்த வித்யூலேகா தற்போது மீண்டும் 'தல 56' மற்றும் 'புலி' படங்களில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வித்யூலேகா மேலும் தக்கார், பஞ்சுமிட்டாய், மீண்டும் ஒரு காதல் கதை, மாப்ளே சிங்கம், தண்ணி வண்டி, ஆகிய தமிழ் படங்களிலும் ஒருசில தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலக நாயகனை ஒரே ஒரு நாளில் முந்திய தல அஜீத்?

வரும் தீபாவளி தினத்தில் அஜீத்தின் ''தல 56'' மற்றும் கமல்ஹாசனின் ''தூங்காவனம்'' ஆகிய இரு படங்களும் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட ...

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து சூர்யாவை சந்தித்த பாண்டவர் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை...

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தேவிஸ்ரீ பிரசாத்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 1 என உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில்...

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தை பெற்றார் தனுஷ்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளத்தில் தென்னிந்திய நடிகர்களில் 2 மில்லியன்களுக்கும் அதிகமான...

ரசிகர்களுக்கு 'தல' வழங்கும் வியாழக்கிழமை விருந்துகள்

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்...