தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணைந்த பிரபல காமெடி நடிகை

  • IndiaGlitz, [Wednesday,November 16 2016]

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்த வந்த தனுஷ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் திரைப்படம் 'பவர்பாண்டி'. ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் தனுஷ், கெளதம் மேனன், மடோனா சபாஸ்டியன் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகை வித்யூராமன் தற்போது இணைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.