நடிகை வித்யுலேகா ராமனின் "பேச்சுலர் பார்ட்டி" போட்டோஸ்.....!

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

நடிகை வித்யுலேகா ராமனின், சகோதரியான கீதாஞ்சலி செல்வராகவன் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன், தமிழ் சினிமாவில் கடந்த 2012-இல் வெளிவந்த கவுதம் மேனனின், நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதன் பின் ப.பாண்டி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பஞ்சு மிட்டாய், மீண்டும் ஒரு காதல் கதை, வீரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பு மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சென்ற ஆண்டு இவருக்கும், ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய்-க்கும் நிச்சயம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் வித்யுலேகாவின் தோழிகள் சேர்ந்து, பிரைடல் ஷவர் விழாவை அவருக்காக அண்மையில் நடத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் அவரது சகோதரி கீதாஞ்சலி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.