தல 59: வித்யாபாலன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

தல அஜித் நடிக்கும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் 'பிங்க்' ரீமேக் படமாக இருந்தாலும், 'பிங்க்' படத்தில் இல்லாத தமிழ் பதிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு கேரக்டரில் நடிக்க வித்யாபாலான் ஒப்பந்தமாகியுள்ளார். அஜித்தின் மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் இந்த படத்திற்காக ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். மேலும் இவருடைய கேரக்டர் அஜித்தை ஊக்கப்படுத்தும் முக்கியமான கேரக்டர் என்றும் அஜித்-வித்யாபாலன் ஆகிய இருவருக்கும் ஒரு பாடலும் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நான்கு பாடல்கள் கம்போஸ் செய்யவிருப்பதாகவும், அதில் ஒன்றுதான் அஜித்-வித்யாபாலன் பாடல் என்றும் கூறப்படுகிறது.

போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜயகாந்த், மாதவன் பட நாயகிக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்

விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்',  மாதவன் நடித்த 'நான் அவள் அது' மற்றும் ஒருசில தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஷமிதா ஷெட்டி. இவர் தற்போது 'தி டெனட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உங்களுக்கும் ஒரு காலம் வரும்: பிரபல அரசியல் தலைவருக்கு ரஜினி வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் அவரது மகன் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் இணைய முயற்சி செய்தார்.

'தில்லுக்கு துட்டு 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது.

'கண்ணே கலைமானே' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்பது தெரிந்ததே.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்-விஷால் சந்திப்பு! காரணம் என்ன?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்தார்.