என்னை பிடிக்காதவர்கள் என் படங்களை பார்க்க வேண்டாம்: அஜித் நாயகி
- IndiaGlitz, [Tuesday,October 08 2019]
அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், ‘தன்னை பிடிக்காதவர்கள் தனது படத்தை பார்க்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது:
நான் நடித்த 'டர்ட்டி பிக்சர்', 'கஹானி' போன்ற படங்களின் வெற்றிக்கு பின் நான் கதைகளை தேர்வு செய்ததில் சுதந்திரமாக செயல்பட்டேன். மொழி எல்லைகளை தாண்டி நடிப்பதற்கு என் தைரியம்தான் காரணம். கதைகள் தேர்வில் துணிச்சலாக சுதந்திரமாக செயல்படுகிறேன். நான் நடிக்கும் எல்லா படங்களும் சிலருக்கு பிடிக்கலாம் இன்னும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். பிடிக்காதவர்கள் எனது படங்களை பார்க்க வேண்டாம்.
எந்த மாதிரி கதைகளிலும் நடிப்பது என்ற முடிவை எடுப்பது அவரவர்கள் உரிமை. அதேபோல் ஒரு திரைப்படத்தை பார்க்காமலே படங்களை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம். பெயரை மாற்ற வேண்டும். கதையை மாற்றவேண்டும் என்று போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது’ என்று வித்யாபாலன் தெரிவித்தார்.