கணவர் படத்தில் நடிக்காதது ஏன்? வித்யாபாலன் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,August 29 2019]
அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் சமீபத்தில் தமிழ் ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார். நேற்று கூட அவர் தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கூறி அதிர்ச்சி அடைய செய்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது கணவர் சித்தார்த் பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அவருடைய படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் படம் குறித்த எனது கருத்தை கூறுவேன். அந்த கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுடன் வாக்குவாதம் செய்வேன். ஆனால் கணவர் தயாரிக்கும் படத்தில் நடித்தால் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினார்.
மேலும் என்னால் அவருடன் சம்பளம் குறித்து பேரம் பேச முடியாது. என்னுடைய சம்பளத்தை அவர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிர்ணயம் செய்தால் அவருடன் வாதிட முடியாது. எனவே சித்தார்த் படத்தில் நடிப்பதை தவிர்க்கின்றேன்' என்று கூறினார். வித்யாபாலன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மிஷன் மங்கள்' திரைப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.