close
Choose your channels

'தல 59' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? வித்யாபாலன் விளக்கம்

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூலித்து உலக அளவில் ரூ.200 கோடி வசூலை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் அமிதாப் கேரக்டரில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூன்று முக்கிய நாயகிகள் கேரக்டரில் நடிக்க நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'பொதுவாக எனக்கு ரீமேக் படத்தில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்ற கேரக்டர் இருப்பதாக கூறி போனிகபூர் எனக்கு அழைப்பு விடுத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை காரணமாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுவொரு சிறிய கேரக்டர் தான் என்றாலும் அவருக்காக இந்த கேக்ரடரில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்று வித்யாபாலன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment