கணிதமேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜித் நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,May 08 2019]

கணித மேதை சகுந்தலா தேவி என்றால் இந்தியாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெங்களூரை சேர்ந்த சகுந்தலாதேவி, கம்ப்யூட்டரைவிட வேகமாக கணக்குகளை முடித்து உலக கணித மேதைகளை ஆச்சரியப்படுத்தினார். உதாரணமாக 1977ஆம் ஆண்டு சகுந்தலாதேவி 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை யூனிவாக்-1108 என்ற கம்ப்யூட்டரை விட 12 வினாடிகள் விரைவாக செய்து முடித்து சாதனை செய்தார்.

இந்த நிலையில் தற்போது கணிதமேதை சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று இந்தியில் தயாராகவுள்ளது. அனுமேனன் இயக்கத்தில் விக்ரம் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் சகுந்தலாதேவியின் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார். இவர் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' உள்பட பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகை என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், சிறு கிராமத்தில் பிறந்து உலகையே வியக்க வைத்து மனித கம்ப்யூட்டராக வாழ்ந்த அந்த கணிதமேதையின் கேரக்டரில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.