என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் மகிழ்ச்சி! ஜிவி பிரகாஷ் தங்கை விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் ’விடுதலை’. இந்த படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ’நான் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட காரணத்தினால் சொல்கிறேன், ’விடுதலை’ திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு திரைப்படம் என்று புகழாரம் சூட்டினார்.


 

இந்த நிலையில் இந்த படத்தில் சூரி ஜோடியாக நடித்திருப்பவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் ஒரு பழங்குடியின பெண்ணாக நடித்திருப்பதாகவும், இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் மிகவும் அற்புதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும் என்றும் எனக்கு இரண்டாம் படத்தில் அது அமைந்தது அதிர்ஷ்டமாக நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.