'விடுதலை 2' ரன்னிங் டைம் 4 மணி நேரமா? வெற்றிமாறனின் வித்தியாசமான திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’விடுதலை 2’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பதால் வெற்றிமாறன் வித்தியாசமான திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே ’விடுதலை 2’ படத்தின் காட்சிகள் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றிமாறன் இந்த படத்தை இரண்டரை மணி நேரமாக எடிட் செய்து திரையரங்குகளில் வெளியிடவும், அனைத்து காட்சிகளையும் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படம் நான்கு மணி நேரத்திற்கு மேல் ஓடிடியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறனின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments