'விடுதலை 2' படத்தின் முக்கிய அப்டேட்.. உறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கிய ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் தொடங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இதற்கிடையில், அடுத்த கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தினம் தினம்" என்று தொடங்கும் இந்த பாடலை இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய போஸ்டரிலும் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கவுதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Time for us to go #DhinamDhinamum
— Sony Music South India (@SonyMusicSouth) November 14, 2024
From November 17th 💕 Stay Tuned 🤍#VetriMaaran’s #ViduthalaiPart2 🔜❤️#ViduthalaiPart2FromDec20
An @ilaiyaraaja Musical ❤️@VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre… pic.twitter.com/wHmfpCbO3n
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments