'விடுதலை 2' படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்.. ரெட் ஜெயண்ட் மூவீஸ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பது தெரிந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் மற்றும் VFX பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டப்பிங் பணிகளுக்கு முன்னதான பூஜை குறித்த புகைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து, டப்பிங் பணிகள் முடிவடைந்த உடன் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’விடுதலை’ முதல் பாகத்தில் நடித்த சூரி மற்றும் விஜய் சேதுபதி உடன் இரண்டாம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா, மஞ்சு வாரியர் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர் என்பதும், இந்த படம் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Director #VetriMaaran 's #ViduthalaiPart2 dubbing kickstarts from today. Check out dubbing pics ft #Vijaysethupathi & #Soori
— Red Giant Movies (@RedGiantMovies_) October 10, 2024
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72… pic.twitter.com/QWBkEJAT2a
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com