'விடுதலை 2' படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்.. ரெட் ஜெயண்ட் மூவீஸ் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பது தெரிந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் மற்றும் VFX பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டப்பிங் பணிகளுக்கு முன்னதான பூஜை குறித்த புகைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து, டப்பிங் பணிகள் முடிவடைந்த உடன் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’விடுதலை’ முதல் பாகத்தில் நடித்த சூரி மற்றும் விஜய் சேதுபதி உடன் இரண்டாம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா, மஞ்சு வாரியர் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர் என்பதும், இந்த படம் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தாவின் 'சிட்டாடல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி..!

நடிகை சமந்தா பாலிவுட்டில் "சிட்டாடல்" என்ற தொடரில் நடித்து வந்த நிலையில், அந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியானது.

நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்த இயக்குனர்.. பூனம் கவுர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்தார் என்று நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை.. களத்தில் இறங்கிய பீட்டா அமைப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்ட நிலையில் பீட்டா அமைப்பு உடனடியாக களத்தில் இறங்கி, கழுதையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சண்டை போட்டா தான் மக்கள் லவ் பண்ணுவாங்களா? ஜாக்குலின் குறித்து அன்ஷிதா

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இப்போதே நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதும் 24 மணி நேரத்தில்

குழந்தை பாக்கியம் தரும் சக்தி வாய்ந்த பரிகாரம்.! ஸ்ரீ சக்கரத்தின் ரகசியம்.! :பாலாறு சுவாமிகள்

பிரபல ஆன்மீக ஜோதிடர் பாலாறு சுவாமிகள், ஆன்மீக கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், பரிகாரங்கள், ஸ்ரீ சக்கரம், குழந்தை பாக்கியம், உணவு மற்றும் கொடிமரம்