நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்வி தான்யா.. விதார்த் நடித்த 'அஞ்சாமை' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விதார்த் நடித்த ‘அஞ்சாமை’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டாக்டராக வேண்டும் என்று கனவுடன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளி படிப்புக்கு மேல் நீட் தேர்வு என்ற ஒரு தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த தேர்வால் பல மாணவர்களின் டாக்டர் கனவு கனவாகவே சென்று விடுகிறது என்றும் எனவே நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று போராடும் ஒரு மாணவன், அந்த மாணவனின் தந்தை மற்றும் வழக்கறிஞர் ஆகியோர்களின் கதை தான் ‘அஞ்சாமை’ படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பல பிரபல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நீட் தேர்வை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை எதிர்த்து ஒரு வழக்கறிஞர் போராடுகிறார் என இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது.
விதார்த் மற்றும் வாணி போஜன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் ரகுமான், கிருத்திக் மோகன், ரேகா சிவன் மற்றும் பலர் நடித்துள்ளனர், சுப்புராமன் இயக்கத்தில், கார்த்திக் ஒளிப்பதிவில், ராகவ் பிரசாத் இசையில் உருவாகும் இந்த படம் நீட் தேர்வை விரிவாக அலசும் ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting the official trailer of #Anjaamai. A story of sacrifice and hope. Watch now!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 28, 2024
🔗 https://t.co/6eBcreOtVd#அஞ்சாமை @vidaarth_actor @vanibhojanoffl @actorrahman @SubbuRa31342936 @karthick_p_dop #RaghavPrasad @kala_charan @ramsudharsan30 @mokibastudios @prabhu_sr… pic.twitter.com/6rDajh5TZa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments