நதியில் குழந்தைப்போல விளையாடும் விஜய் பட நடிகை… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. என்னதான் பாய்ஸ் படத்தில் தனது குறும்புத்தனமான நடிப்பை நடிகை ஜெனிலியா வெளிப்படுத்தி இருந்தாலும் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “சச்சின்” திரைப்படத்தின் மூலம்தான் நடிகை ஜெனிலியாவின் தனித்துவமான நடிப்பை ரசிகர்கள் முழுமையாகப் புரிந்து கொண்டனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகை ஜெனிலியா பின்பு கடந்த 2008 ஆம் ஆண்டு “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்தில் மீண்டும் ஒரு அசத்தலான நடிப்பை கொடுத்து, தமிழ் இளசுகளின் நெஞ்சங்களில் ஓட்டிக் கொண்டுவிட்டார். பின்னர் “உத்தமபுத்திரன்“, “வேலாயுதம்“ போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ் முக்கை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் தனித்துவமான நடிகையாக வலம்வந்த நடிகை ஜெனிலியா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். சமீபத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்து தனது கணவர் ரித்திஷ் தேஷ் முக்குடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி கலக்கி இருந்தார். தற்போது இரண்டு குழந்தைகள், கணவர் என்று படு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ஜெனிலியா ஒரு நதியில் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.
சினிமாவில் குறும்புக்காரப் பெண்ணாகத் தொடர்ந்து நடித்து தமிழ் இளசுகளைக் கட்டிப் போட்டிருந்த நடிகை ஜெனிலியா ரியல் வாழ்க்கையிலும் குறும்புத்தனத்திற்குப் பெயர் போனவர்தான். அந்த வகையில் தனது கணவருடன் இணைந்து அவ்வபோது ரீல்ஸ்களை வெளியிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளிவிடுவார். அவர் தற்போது நதியில் விளையாடும் க்யூட் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments