எதையும் ஒளித்து வைக்க முடியாது… நடிகை அமலா பாலின் செம குத்து டான்ஸ் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது வெப் சீரிஸிலும் களம் இறங்கி இருக்கிறார். இவரது நடிப்பில் "குடி யெடமைதே" எனும் வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது. கன்னடத்தில் சிறந்த படங்களைக் கொடுத்த பவன் குமார் இயக்கிய இந்த வெப் சீரிஸ் டைம் லூபை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் மேலும் இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடிகை அமலா பால் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற Hideway எனும் பாப் பாடலுக்குச் மிகச் சிறப்பாக நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். கூடவே எதையும் ஒளித்து வைக்கமுடியாது, இது என் கட்டுப்பாட்டில் இல்லை எனும் கேப்ஷனை போட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் மைனாவாக அறிமுகமான நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் மார்டன் லுக்கோடு பாப் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இது நெட்டிசன்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று லைக்குகளை அள்ளி வருகிறது.
இந்நிலையில் தமிழில் நடிகை அமலா பால் நடித்த "அதோ அந்தப் பறவை போல", "காடவர்" போன்ற திரைப்படங்களில் ரிலீசாக உள்ளது. மலையாளத்தில் "ஆடுஜீவிதம்" திரைப்படமும் விரைவில் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com