கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸானது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியா, என இந்தியா வரை இந்த வைரஸின் தாக்கம் உள்ளது.
இந்தியாவிலும் நேற்றோடு சேர்த்து 5 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸானது அறிகுறி தெரிவதற்கு முன்பே பரவி விடும் அபாயம் உள்ளது. மேலும் நீங்கள் நோயாளியோடு நேரடி தொடர்பில் இல்லாமல் இருந்தாலும் நோயாளி தொட்ட பொருட்கள் மூலமாகக் கூட பரவ வாய்ப்புள்ளதாக யூகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பானது ஒரு யூடியூப் வீடொயோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
1.கைகளை அடிக்கடி கழுவுங்கள்
2.சமைக்கும் முன்பும் பின்பும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
3.நோய் தாக்கப் படாத விலங்குகள் பறவைகளை நன்கு சமைத்த பின்பு உண்ணுங்கள்.
4.தும்மல்,இருமலின் போது முகத்தை டிஸ்யூ கொண்டு மூடிக்கொள்ளுங்கள்.
5. மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள்.
6.இருமல்,தலைவலி,காய்ச்சல்,மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
இது போன்ற பல மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com