முகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ!!!

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

 

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டு ஒரு நாய்க்குட்டி தனது எஜமானியுடன் ஒய்யாரமாக வாக்கிங் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சியை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மட்டும் 90 லட்சம் மக்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். மேலும் 5 ஆயிரம் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.

ஒருபெண் தனது செல்லப்பிராணியை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது அதற்கும் முகக்கவசம் அணிவித்து அழைத்துச் செல்கிறார். அதை பார்த்து பலரும் சந்தோஷத்தை வெளிப்படுத்து கின்றனர். காரணம் உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வந்த பிறகு பலரும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் வாழ்ந்து வருகிறோம் என்ற அசாதாரண சூழ்நிலையை மறந்தே விட்டனர். இதனால் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ்வதாக நினைத்துக் கொண்டு முகக்கவசம் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது போன்ற பல தவறுகள் நடைபெறுகிறது.

அந்த வகையில் முகக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த வைரல் வீடியோ மக்களுக்கு மற்றொரு முறை நினைவுப்படுத்தி வருகிறது. முன்னதாக விலங்குகளுக்கும் சில நேரங்களில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை செய்திகளில் பார்க்க முடிந்தது. ஆனால் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு விலங்குகளை தாக்குவதில்லை என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.