ஸ்ரீவித்யாவுக்கு பதிலாக வித்யாபாலனை தேர்வு செய்த கமல்

  • IndiaGlitz, [Tuesday,June 28 2016]

பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'செல்லுலாய்டு' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இந்த படத்தில் பிரித்விராஜ் நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் கமல், மற்றொரு எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த எழுத்தாளர் பிரபல பெண் எழுத்தாளரான மாதவிக்குட்டி.

இந்த கேரக்டரில் நடிக்க சரியான நடிகை ஸ்ரீவித்யாதான் என்றும், அவர் மாதவிக்குட்டியுடன் நெருங்கிய பழகியவர் என்பதால் அவருடைய மேனரிசத்தை முழுவதுமாக அறிந்தவர் என்றும் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் உயிருடன் இல்லாததால், அந்த கேரக்டரில் நடிக்க தற்போது வித்யாபாலனை தேர்வு செய்துள்ளதாகவும் ஸ்ரீவித்யாவை அடுத்து அந்த கேரக்டருக்கு பொருந்துபவர் வித்யாபாலன் மட்டுமே என்றும் இயக்குனர் கமல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை வித்யாபாலனிடம் சொன்னவுடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் வரும் செப்டம்பரில் தொடங்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும் அவர் மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

'காக்கா முட்டை' மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' டிரைலர் ரிலீஸ் தேதி

தனுஷ் -வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...

ஜெயம்ரவி- சமுத்திரக்கனி படத்தில் இணையும் பிரபல நடிகர்

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது 'போகன்' படத்தில் நடித்து வருகிறார்...

'சிங்கப்பூர்' SIIMA விழாவில் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு

'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

ரஜினிக்கு குரல் கொடுத்த மலேசிய ஆர்ட்டிஸ்ட் இவர்தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் ரிலீஸ் தேதி...

மலேசியாவில் இரண்டு முறை ரிலீஸ் ஆகிறது 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...