துபாய் அல்ல, 'விடாமுயற்சி' படக்குழு செல்லும் செல்லும் நாடு இதுதான்.. படப்பிடிப்பு இத்தனை நாட்களா?

  • IndiaGlitz, [Sunday,September 24 2023]

அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி ’விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 35 முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து சென்னை திரும்பும் படக்குழு சில நாட்கள் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை நடத்தி விட்டு அதன் பிறகு மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தான் துபாயில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

துபாயில் உள்ள பாலைவனத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் சமீபத்தில் தனது பைக் டூரை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் படக்குழுவுடன் அவரும் அஜர்பைஜான் செல்ல உள்ளார்.

அதேபோல் த்ரிஷா மற்றும் ஹூமா குரேஷியும் படக்குழுவினர்களுடன் செல்ல இருப்பதாகவும், செல்லும் முன் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகும் என்றும் அதில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

லைக்காவின் தயாரிப்பில், அனிருத் இசையில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.