'விடாமுயற்சி' பாடகர் அந்தோணி தாசன், மனைவியுடன் ரொமான்ஸ்.. வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Saturday,December 28 2024]
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை பாடிய அந்தோணி தாசன் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்ப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அனிருத் இசையமைத்த இந்த சிங்கிள் பாடலை தெருக்குரல் அறிவு எழுத, அந்தோணி தாசன் பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்தோணி தாசன் தனது மனைவியை செல்லமாக தூக்கி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.