close
Choose your channels

ஒன்றல்ல.. இரண்டு போஸ்டர்.. 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. எப்போது?

Sunday, July 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியான நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் இன்று ஒன்றல்ல, இரண்டு போஸ்டர்கள் வெளியாகும் என்று தெரிவித்து, வெளியாகும் நேரத்தையும் பதிவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் சென்னை திரும்பிய அஜித் மீண்டும் அஜர்பைஜான் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரம் ‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகும் என செய்திகள் கசிந்தன. அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று இரவு 8.02 மணிக்கு இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த போஸ்டர்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment