இந்த ஞாயிறும் 'விடாமுயற்சி' அப்டேட்டா? இணையத்தில் கசிந்த மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

கடந்த வாரம் ஞாயிறு அன்று ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த வாரமும் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாகவும் அது அனேகமாக செகண்ட் லுக் போஸ்டராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அஜர்பைஜானில் நடந்து வரும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த கட்டமாக படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது என்பதும் அஜித் கைகளில் பேக் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்லும் மாஸ் காட்சி அந்த பஸ்ல போஸ்டரில் இருந்ததை எடுத்து அந்த போஸ்டர் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று செகண்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் இதில் த்ரிஷாவின் கேரக்டர் போஸ்டர் அல்லது அஜித் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இணைந்த போஸ்டர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ‘விடாமுயற்சி’ செகண்ட் போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.