அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்து இருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாதம் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே படக்குழுவினர் அஜர்பைஜான் சென்று விட்டதாகவும் அஜித் இன்னும் ஒரிரு நாளில் அஜர்பைஜான் செல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு வரும் தீபாவளி அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தீபாவளிக்கு ’விடாமுயற்சி’ ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரு பண்டிகை தினமும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தினமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

ஆர்ஜே பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' 2ஆம் பாகத்தின் டைட்டில் இதுவா? நயனுக்கு பதில் யார்?

நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

சாமியை கொன்னுட்டேன்... விமல் நடித்த 'சார்' டீசர் ரிலீஸ்..!

நடிகர் விமல் நடிப்பில், பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான 'சார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில்

டைம் டிராவல் கதைன்னு சொன்னாங்களே.. விஜய்யின் 'கோட்' படத்தின் கதை லீக்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் கதை டைம் டிராவல் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதை சுருக்கம் வெளியாகி உள்ள நிலையில்

இந்த நூற்றாண்டின் சிறந்த படம் 'காலா' திரைப்படமா? பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் தேர்வு..!

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டின் மாத இதழான சைட் அண்ட் சவுண்ட் என்ற இதழ் வெளியிட்டுள்ள நிலையில் அதில்

'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா? தயாரிப்பது யார்?

கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 20 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.