அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்து இருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாதம் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே படக்குழுவினர் அஜர்பைஜான் சென்று விட்டதாகவும் அஜித் இன்னும் ஒரிரு நாளில் அஜர்பைஜான் செல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு வரும் தீபாவளி அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தீபாவளிக்கு ’விடாமுயற்சி’ ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரு பண்டிகை தினமும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தினமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.