அஜித்துக்கு இணையான ஸ்டைல்.. 'விடாமுயற்சி' படத்தின் அர்ஜுன் போஸ்டர் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அஜித்தின் இரண்டு லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித், த்ரிஷா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை வந்தனர் என்பதும் ஆனால் அஜித் மட்டும் நேராக துபாய் சென்று ரூபாய் 10 கோடி மதிப்புள்ள புதிய கார் வாங்கினார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தை அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதத்துடன் இந்த படத்தின் மொத்த படிப்பிற்கும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் போஸ்டரை சற்றுமுன் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அர்ஜுன் ஸ்டைலிஷ் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அஜித்துக்கு இணையாக அர்ஜுன் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
Meet the Action King @akarjunofficial 🤩 Presenting the 4th look of VIDAAMUYARCHI. 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra… pic.twitter.com/QUDtu6FcCx
— Lyca Productions (@LycaProductions) July 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments