'விடாமுயற்சி' படத்தின் மாஸ் ஃப்ர்ஸ்ட் லுக்.. அஜித் என்ன செய்கிறார் பாருங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு 7.03 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வருவதால் ரசிகர்கள் இந்த அப்டேட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் சற்று முன் அந்த அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அஜித் கோட் சூட் அணிந்து கையில் ஒரு பேக் உடன் கூலர் கண்ணாடி அணிந்து அஜர்பைஜான் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருப்பது போன்ற இந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் உள்ளது. மேலும் ’விடாமுயற்சி திருவினையாக்கும்’ என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

More News

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பிரபலங்களின் 8 திரைப்படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் சுமார் 10 முதல் 15 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்

'கோட்' படத்திற்கு முன்பே வெளியாகும் விஜயகாந்த் படம்.. இயக்குனர் சொன்ன சஸ்பென்ஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் கேப்டன் விஜயகாந்த் தோன்றுகிறார் என்றும் ஏஐ டெக்னாலஜி மூலம் அவரது காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்.

திருமணமான பின்னரும் குறையாத கிளாமரில் டாப்சி.. அதுக்காக உர்பி ஜாவித்துக்கு போட்டியா?

நடிகை உர்பி ஜாவித் தனது இன்ஸ்டாகிராம் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவருக்கு போட்டியாக சமீபத்தில் திருமணமான டாப்சி கிளாமர் புகைப்படங்களை

உலகக்கோப்பை ஜெயித்தவுடன் 3 ஜாம்பவான்கள் ஓய்வு அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஜாம்பவான் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதை அடுத்த கிரிக்கெட்

எனக்கு செண்டிமெண்ட் கிடையாது.. ராகு காலத்தில் படம் ஆரம்பித்து காட்டுகிறேன்.. விஜய் ஆண்டனி

எனக்கு ராகு காலம், எமகண்டம் சென்டிமென்ட் எல்லாம் கிடையாது என்றும், நீங்கள் எந்த டைம் கொடுத்தாலும் அந்த டைமில் நான் படம் ஆரம்பித்து காட்டுகிறேன் என்றும், 'மழை பிடிக்காத மனிதன்'