'விடாமுயற்சி' நாயகி திடீர் மாற்றம்.. அஜித்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ் பட நாயகி..!!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தொடர்ச்சியாக 30 நாட்கள் இந்த படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக ’வலிமை’ திரைப்படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி ஹூமா குரேஷிக்கு பதிலாக ரெஜினா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ உள்பட பல படங்களில் நடித்த ரெஜினா தற்போது 'விடாமுயற்சி’ படத்தில் இணைய இருப்பதாகவும் அஜித்துடன் முதன் முதலாக இந்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.