அஜர்பைஜானில் டின்னர்.. 'விடாமுயற்சி' படத்தின் டிரிபிள் A நட்சத்திரங்களின் மாஸ் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்புக்கு பின்னர் டிரிபிள் A நட்சத்திரங்கள் டின்னர் சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அஜர்பைஜான் படப்பிடிப்பில் அர்ஜுன் இணைந்தார் என்பதையும் பார்த்தோம்.
அது மட்டும் இன்றி இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் இணைந்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அர்ஜூனை அடுத்து இவர் இரண்டாவது வில்லனாக இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித், அர்ஜுன், ஆரவ் என ட்ரிபிள் A நட்சத்திரங்கள் நேற்று படப்பிடிப்புக்கு பின்னர் டின்னர் சாப்பிட்ட புகைப்படம் ஆரவ்வின் சமூக வலைத்தளத்தில் படிவு செய்யப்பட்டுள்ளது. ’நேற்றைய கடின உழைப்பிற்கு பின்னர் சாப்பிடுகிறோம்’ என்று கேப்ஷனாகவும் ஆரவ் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், அர்ஜுன், ஆரவ் ஆகிய ட்ரிபிள் A நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதை இந்த படத்தில் ரெஜினாவும் இணைந்துள்ளார் என்பதும், அவர் இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A night out after a hard day's work 🔥❤️#AK #AjithKumar #Thala #Actionking #ArjunSarja #VidaaMuyarchi #VidaMuyarchi pic.twitter.com/mY9vFHigBk
— Aarav Kizar (@Aravoffl) December 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com