'விடாமுயற்சி' படப்பிடிப்பில் திடீரென மாரடைப்பால் இறந்த பிரபலம்.. அதிர்ச்சியில் படக்குழு..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அஜித், த்ரிஷா, ரெஜினா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்த மிலன் என்பவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து காலமான கலை இயக்குனர் மிலன் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

பிக்பாஸை கூப்பிட்டு கேப்டனை கலாய்த்த கமல்ஹாசன்.. செம கலகலப்பு..!

இந்த வார கேப்டன் ஆக இருந்த சரவணனை, பிக்பாஸை அழைத்து அவருக்கு முன்பே கமல்ஹாசன் கலாய்த்த வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விரைவில் விஜய் டிவியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'.. நாயகியாகும் கமல் பட ஹீரோயின்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக

இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய தமிழ் நடிகர்.. வைரல் வீடியோ..!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான  இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா அபாரமாக

ஒரே நேரத்துல ரெண்டு.. ஜெயம் ரவி போஸ்ட்டை கண்டித்த ஆர்த்தி ரவி..!

நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நேரத்தில் ரெண்டு என பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு அவருடைய மனைவி ஆர்த்தி ரவி செல்லமாக கண்டித்துள்ளார்

அண்டை மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட 'லியோ' அதிகாலை காட்சி.. தமிழக ரசிகர்கள் அதிருப்தி

தமிழகத்தில் 'லியோ' திரைப்படம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு திரையிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சி