90-ஸ் கனவு ஹீரோவுடன் செல்பி எடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்… புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருந்துவரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் 90-ஸ் கிட்ஸ்களின் கனவு ஹீரோவான ஸ்பைடர் மேன் நடிகருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டி கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவிற்கு இயக்குநர் விக்னேஷ் சமீபத்தில் சென்றிருந்தார் என்பதையும் அங்கிருந்து அவர் வெளியிட்ட புகைப்படங்களையும் பார்த்தோம். இதையடுத்து அவருடன் ஏன் நடிகை நயன்தாரா செல்லவில்லை என்பதுபோன்ற கேள்விகளை எல்லாம் ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஸ்பைடர் மேன் கேரக்டரை 90-ஸ் கிட்ஸ்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகர் டோபி மாகுவேருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்ட நிலையில் நானே பக்கத்துல இருந்து செல்பி எடுத்தது மாதிரி இருக்கு… எப்படி தலைவா? என்று இயக்குநர் விக்னேஷ் சிவனை புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் ஒருசில ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கும் ஸ்பைடர் மேன்தானே ஹீரோவாக இருந்திருக்க முடியும் என்று அவரையும் ஸ்பைடர் மேன் ரசிகர் வட்டத்தில் இணைத்துக் கொண்டனர். காரணம் அதுவரை கற்பனையில் மட்டும் சூப்பர் ஹீரோவைப் பார்த்துக் கொண்டிருந்த 90-ஸ் கிட்ஸ்களுக்கு கடந்த 2002 இல் இயக்குநர் சாம் ரைமி ‘ஸ்பைடர் மேன்‘ திரைப்படம் மூலம் ஒரு வீரமான சூப்பர் மேனை கண்முன் கொண்டுவந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகர் டோபி மாகுவேர்.
அதிலும் கிரிஸ்டன் டன்ஸ்ட்- டுடன் மெய்மறந்த காதல் காட்சிகளும் அந்தத் திரைப்படததில் இடம்பெற்றிருக்கும். இதனால் என்றைக்குமே டோபி மாகுவேர் ரசிகர் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இந்நிலையில் டோபி மாகுவேருடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களிடையே பாராட்டை குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments