மாயாவை கவிழ்க்கிறதுக்கு பூர்ணிமா சதின்னு எனக்கு தோணுது.. கரெக்டாக கணித்த போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

பிக் பாஸ் வீட்டில் மாயா அராஜகமாக நடந்து வருகிறார் என்பதும் குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். மாயாவுக்கு ஆதரவாக பூர்ணிமா எல்லாவற்றிற்கும் ஜால்ரா அடிப்பதை பார்க்கும்போது பூர்ணிமா மீதும் பார்வையாளர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாயா மற்றும் பூர்ணிமா குறித்து தினேஷ் மற்றும் விசித்ரா பேசும்போது ’எனக்கு என்னமோ மாயாவை டவுன் பண்றதுக்காக பூர்ணிமா தான் இந்த பிளான் பண்ணுகிறார் என்று தோன்றுகிறது என விசித்ரா கூறுகிறார். பூர்ணிமா தன்னுடைய இரண்டு வார கேப்டன்ஷிப்பில் எல்லோரும் தட்டை கழுவி வைக்க வேண்டும் என்று கூறினார். அதுபோலவே அனைவரும் நடந்து கொண்டனர்.

ஆனால் மாயா கேப்டனாக இருக்கும்போது அவரே தட்டை கழுவுவதில்லை, அவரை பின்பற்றி மற்ற போட்டியாளர்களும் கழுவாமல் வைத்துவிடுகின்றனர். மாயாவுக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என்பதற்காகவே பூர்ணிமா சதி செய்கிறாரோ என்று தோன்றுகிறது என்று விசித்ரா கூறுகிறார்

மேலும் மாயா இந்த வாரம் கேப்டனாக இல்லாமல் இருப்பதால் தான் தப்பித்துள்ளார் ஒருவேளை கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் அவரும் அடக்க ஒடுக்கமாக இருந்திருப்பார் என்று விசித்ரா கூறுவதையும் தினேஷ் ஏற்று கொள்கிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.