ரெண்டு பேரும் லவ்வரா? மணி-ரவீனாவிடம் ஓப்பனாகவே கேட்ட விசித்ரா.. ரவீனா கூறிய பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் மணி சந்திரா மற்றும் ரவீனா ஆகிய இருவரும் காதலர்கள் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்கள் என்பதும் அவை வைரல் ஆகியது என்பதும் தெரிந்ததே.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளன்று மணிசந்திராவை பார்த்ததும் ரவீனா ஆச்சரியமடைந்தார், நீயுமா இந்த போட்டியில்? என்று ரவீனா கேட்டிருந்தார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி முதல் நாள் வேக்கப் பாடலில் மணி சந்திரா டான்ஸ் ஆடும் போது திடீரென ரவீனா அவரது இடுப்பில் ஏறி உட்கார்ந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று ரவீனா மற்றும் மணிச்சந்திரா நெருங்கி பழகுவதை பார்த்து நீங்கள் இரண்டு பேரும் லவ்வரா என்று விசித்ரா ஓப்பன் ஆகவே கேட்டுவிட்டார். இல்லை நாங்கள் ரெண்டு பேரும் நண்பர்கள் தான் என்று ரவீனா மழுப்பிய நிலையில் நீங்கள் பழகும் விதத்தை பார்த்தால் நண்பர்கள் போல் தெரியவில்லை, காதலர்கள் போல் தெரிகிறது, அது ஒன்றும் தப்பில்லை என்று கூற அதற்கு இருவரும் ‘இல்லை நாங்கள் நண்பர்கள் தான், கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று மழுப்புகின்றனர்.

இருப்பினும் இருவரும் இந்த நிகழ்ச்சி முடிவதற்கு முன் காதலர்கள் என்பதை ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.