அன்று என்ன நடந்தது என தினேஷுக்கு இப்ப வரைக்கும் தெரியாது: விசித்ராவின் கணவர் சொன்ன தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் உறவினர்களின் வருகை வாரம் என்பதால் பெரிய அளவில் போட்டியாளர்களுக்குள் சண்டை சச்சரவு இல்லை என்றாலும் இனி அடுத்து வரக்கூடிய இரண்டு வாரங்களில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விசித்ராவின் கணவர் மற்றும் மூன்று மகன்கள் நேற்று வந்த நிலையில் எல்லோரிடமும் அவர்கள் சகஜமாக பேசினர். இந்த நிலையில் தினேஷ் மற்றும் அர்ச்சனா மீது தனக்கு கொஞ்சம் வருத்தம் என்று விசித்ராவின் கணவர் தெரிவித்தார். சர்க்கரை ஒளித்து வைத்த விஷயத்தில் தினேஷ், விசித்திராவை கடுமையாக திட்டிவிட்டார் என்றும் ஆனால் அன்று என்ன நடந்தது என்று அவருக்கு இப்போது கூட தெரியாது என்றும் அவர் வெளியே வந்து பார்த்த பின்னர் தான் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.
உண்மையில் அன்றைய தினம் மாயா மற்றும் பூர்ணிமா தான் சர்க்கரையை ஒளித்து வைத்திருந்தனர். விசித்ரா அதை வெளியே சொல்லாமல் தான் ஒளித்து வைத்தது போல் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் தினேஷ் ’உங்கள் வயசுக்கு இப்படி திருடி பெயரை கெடுத்துகிடாதீங்க’ என்று சொல்லி இருந்தார். இந்த உண்மையை வெளியே சொல்லாத விசித்ரா கணவர், தினேஷ் விசித்ராவை திட்டியது எங்கள் மனதை கஷ்டப்படுத்தியது என்று மட்டும் கூறினார். இதனை அடுத்து தினேஷ் விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அதேபோல் பொம்மை டாஸ்க்கில் விசித்ரா மீதுள்ள கோபத்தை அர்ச்சனா கொட்டியதும் தனக்கு வருத்தமாக இருந்தது என்று விசித்ராவின் கணவர் தெரிவித்தார். மொத்தத்தில் விசித்ராவின் கணவர் மற்றும் மகன்களின் வருகை சக போட்டியாளர்களை நன்றாக யோசிக்க வைத்திருக்கும் என்பது மட்டும் தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com