ஜெயிலுக்கு போக முடியாது... விசித்ராவின் முடிவை அடுத்து கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் மோசமாக விளையாடியதாகவும், இதனை அடுத்து இருவரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்றும் அனைத்து போட்டியாளர்களும் ஒருமித்த முடிவை எடுக்கின்றனர்.

இந்த நிலையில் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் ’நாங்கள் மோசமாக விளையாடினோம் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதனால் ஜெயிலுக்கு போக முடியாது என்று கூறுகிறார்

இதனையடுத்து கேப்டன் தினேஷ் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் அவர் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் சென்று ’அவர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ அது வேறு விஷயம், அவர்கள் இருவரும் வெளியே உட்கார்ந்து கொள்ளட்டும், அதைப் பற்றி பிரச்சனை இல்லை, ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருவரும் வரக்கூடாது’ என்று கூறுகிறார். இதனை அடுத்து இதனை அனைத்து போட்டியாளர்களும் ஆமோதிக்கின்றனர்.

விசித்ரா பார்ட் 2வை பார்க்க போகிறீர்கள் என்று சவால் விட்ட நிலையில் அவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது. இதற்கு எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.